Saturday, July 4, 2009

ஜோதிடக் கலை முதன் முதலில் தோன்றியது எந்த நாட்டில்?

மேனாட்டு அறிஞர்கள் கூற்று
சிந்துசமவெளி நாகரீகம்
வேதத்தில் ஜோதிடம்
ஆரியபட்டர் வழிபடும் தெய்வம்
திராவிடமும், ஜோதிடமும்

பக்கம்
1
2

மேனாட்டு அறிஞர்கள் கூற்று
மேனாட்டு அறிஞர்கள் ஆய்வுசெய்து ஜோதிடம் சால்டியர்கள் மற்றும் பாபிலோனியர்களிடமிருந்தே பிறந்ததாகக் கருதுகின்றனர். எகிப்து ஜோதிடம் மிகப் பழமையாயினும் அது சால்டியர்களிடமிருந்தே வந்திருக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். மேலும் அவர்கள் கருதுப்படி ஈரான் மற்றும் சீனநாட்டு ஜோதிடமும் சற்றுப் பழமையானது என்று கருதுகின்றனர். அரேபியர்கள் கருதுப்படி கிரேக்க மற்றும் ரோம ஜோதிட விதிகள் பாபிலோனிய மற்றும் எகிப்தியர்களிடதிருந்து பெறப்பட்டது. மேனாட்டு ஜோதிட வரலாற்று ஆய்வாளர்கள், “இந்தியர்கள் கிரேக்க, ஈரானியர்களிடம் இருந்தே ஜோதிடக் கலையை கற்றிருக்க வேண்டும்” என்றும் சிந்துசமவெளி மக்களுக்கு ஜோதிடம் தெரியாது என்றும் கூறுகின்றனர். இக்கருத்து முற்றிலும் தவறான ஒன்றாகும்.
முற்காலத்தில் நாகரிகத்தின் தொட்டில்களாக ஆற்றுப்படுகைகள் அமைந்திருந்தன. மெசபடோமிய பள்ளத்தாக்குப் பகுதி யூப்ரட்டிஸ், டைகரிஸ் நதிக்கரையில் அமைந்தது. எகிப்து நாகரீகம் நைல் நதி பள்ளத்தாக்கில் தோன்றியது. சீன நாகரீகம் “ஹீவாங் ஹோ“ நதிக்கரையில் வளர்ந்தது. இதைப்போல் சிந்து சமவெளி நாகரீகம் இந்தியாவில் பீடு நடைபோட்டு அக்காலத்தில் வளர்ச்சியடைந்திருந்த உண்மையை அந்த ஆய்வாளர்கள் மறந்துவிட்டனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிந்துசமவெளி நாகரீகம் பொதுவாக வரலாற்று ஆய்வாளர்கள் சிந்து சமவெளி நாகரீகம் கி.மு.3000-க்கும், கிமு.1500க்கும் இடைப்பட்ட காலம் என்று வறையறுத்திருக்கின்றனர். ஏனையநாட்டு சமவெளி நாகரீகத்தைவிட இது பெரும் பரப்பளவைப் பற்றிப் படர்ந்திருந்தது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் பலுச்சிஸ்தானம், சிந்து, பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மேற்கு உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. சிந்து சமவெளி மக்களே இந்துக்கள் எனப்படுகின்றனர். இந்நாகரீகம் வேத காலத்திற்கும் முற்பட்ட நாகரீகமாக விளங்கி இருந்திருக்க வேண்டும். இயற்கையின் சீற்றத்தின் காரணமாக இக்காலத்திலிருந்த அறிவுத் திரட்டுகள் அழிந்துபட்டிருக்க வேண்டும். வேதங்கள் கூட வழி வழியாக கர்ணபரம்பரையாக மனப்பாடம் செய்தே வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. இன்றுள்ள வேதம் (ரிக், யஜீர், சாம, அதர்வணம்) வாய்வழி புழக்கத்தில் இருந்து வந்ததேயாகும்.
சிந்துசமவெளி நாகரீக காலத்தின் சின்னங்கள் சில மெசபடோமியா நாகரீகப் புதைபொருள் ஆய்வில் கிடைத்துள்ளன. இரு நாகரீகங்களுக்கும் நேரடித் தொடர்பு இருந்திருக்க வேண்டுமென்பது இதன்மூலம் தெளிவாகத் தெரியும். அதன்படி பார்த்தால் அக்காலத்தில் மெசபடோமியர்களிடமிருந்து அவர்கள் கற்றிருந்திருக்கலாமே! எனவே சிந்துசமவெளி மக்களுக்கு ஜோதிடம் தெரியாது என்பது தர்க்கரீதியாக தவறு ஆகும். ஆயினும் இந்தியர்கள் அவ்வாறு அவர்களிடதிருந்து கற்கவில்லை என்பதே மேனாட்டு அறிஞர்களின் கருத்து அவ்வாறாயின் அக்காலத்தில் இந்தியத் திராவிடர்கள் அவர்களுக்கு என தனி ஜோதிடக் கூற்று விதிகளை ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். இயற்கையின் சீற்றத்தால் சிந்து சமவெளி ஜோதி்ட நூல்கள் அழிந்துபோய், சிந்து சமவெளித் திராவிட மக்களின் தனிநிலை ஜோதிடக் கூறுகள் செவிவழிச் செய்தியாகப் பிற்காலத்தில் பரவியிருந்திருக்க வேண்டும். திராவிட மற்றும் ஆரியரது இரு விதிகளும் கை குலுக்கிக் கொண்டு ஜோதிடத்திற்குப் புதிய பரிமாணக் கூடாரம் அமைந்திருக்க வேண்டுமென்பதே என் கருத்தாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேதத்தில் ஜோதிடம்
பின் வந்த அதர்வண வேதத்தில் நடைமுறை ஜோதிடக் கூறுகளும், பல்வேறு சமூக நடைமுறைகளும், நம்பிக்கைகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதில் ஜோதிடம் பற்றி 165 சுலோகங்கள் உள்ளன. சூரிய, சந்திர நட்சத்திர வழி சஞ்சார பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வேதத்தில் ஆரியர் மற்றும் ஆரியர் அல்லாதோரது (உதாரணம்-செய்வினை) நம்பிக்கைகளும் விளக்கப்பட்டுள்ளன. எனவே அதர்வணம் திராவிட, ஆரிய, இலமூரியக் கோட்பாடுகளின் மொத்தக் கலவையாகும். பிரம்மன் ஆரியர்களது கடவுள். சிவனும், பார்வதியும் திராவிடர்கள் கடவுள்கள். தாய்தெய்வ விருட்ச வழிபாடு இலமூரியர்கள் கடவுள்கள் ஆவர். சூரியனும், சந்திரனும் சிவ, பார்வதி அம்சமாகப் போற்றப்பட்டனர். இவர்கள் இருவரும் திராவிட ஜோதிடத்தின் குருக்கள் ஆவர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆரியபட்டர் வழிபடும் தெய்வம்
ஆரியபட்டர் தாம் எழுதிய “ஆரியபட்டியம்“ என்னும் நூலின் முதல் பாடலில், “ப்ரதிபத்ய கமனேகம் சத்யம் தேவதம் பரம் பிரஹ்ம ஆர்யபட்டஸ் த்ரீணி கத்தி கணிதம் காலக் கிரியாம் கோளம்“
என்று குறிப்பிடுகிறார். “இவ்வுலக படைப்புக்கு காரணனும், சத்திய வடிவங் கொண்டவனுமான பரப்பிரம்மத்தை வணங்குகிறேன்“ என்று அவர் கூறுகிறார். ஆரியர்கள் தமது முதல் தெய்வமாக பிரம்மத்தை வணங்கினர். அதே சமயம் ஆதியில் தோன்றி கடல் சீற்றத்தால் இந்தியத் தென்கோடியில் அழிந்துபோன இலமூரிய கண்டத்தில் வாழ்ந்த உலகின் முதற்குடிகள் ஆதிபராபரையாம் தாய்த்தெய்வங்களை (மரங்கள்) இயற்கையோடு இணைந்து வழிபட்டு வந்திருக்கின்றனர். இந்த வழிபாடே பிற்காலத்தில் “பழையோன்“, “பகவதி”, “காளி“ எனும் தெய்வ வழிபாடாக மாறியிருந்திருக்கிறது வேதத்தில் அதர்வண காளி போற்றப்படுகிறாள்.
இலமூரியர்கள் பேசிய மொழி ஆதித்தமிழாக இருந்திருக்கலாம். கேரளாவின் மிகப்பழமையான கோயிலான பரசுராமர் ஆலயத்தில் ஆதித்தமிழ் மொழியின் கல்வெட்டுக்கள் உள்ளன.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திராவிடமும், ஜோதிடமும்திராவிட ஜோதிடக் குருக்களான சிவன், பார்வதிக்குப்பின் ஜோதிடக் கலாச்சாரத்தின் இணைப்புப்பாலமாக பின்னர் நாரதமகரிஷி வருகிறார். ஜோதிடப் புலமையில் அவர் மிகச்சிறந்தவராக விளங்கியிருந்திருக்கிறார். இந்திரன், வருணன், விஷ்னு, இராமன், கிருஷ்ணன் ஆகியோர் ஜோதிட விஷயங்களோடு முற்றிலும் தொடர்புடையவர்களாகத் தோன்றவில்லை.
ஸ்ரீராமனது பக்தனான திராவிடர் கடவுள் ஹனுமன் ஜோதிடத்தில் மிகுந்த ஞானம் உடையவராக விளங்கியுள்ளார். இராமனது குரு வசிஷ்டர் ஜோதிட சித்தாந்தியாக இருந்திருக்கிறார். ஜோதிடப் பலனுரைக்கும் பிரிவில் திராவிடர்கள் சிறந்த விளங்கியிருந்திருக்கின்றனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------